மரண காமெடி 100 % சிரிப்பு உறுதி....!!!! Vadivelu Back To Back Comedy Scenes # Tamil Comedy Scenes

Your video will begin in 15
Skip ad (5)
20 Views
Published
மரண காமெடி 100 % சிரிப்பு உறுதி....!!!! Vadivelu Back To Back Comedy Scenes # Tamil Comedy Scenes





வடிவேல் (vadivelu, பிறப்பு: செப்டம்பர் 12, 1960)[1] தமிழ்த் திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மதுரையை சேர்ந்தவர். 1991இல் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார்.

இவர் செப்டம்பர் 12, 1960 ஆம் ஆண்டு நடராஜன் மற்றும் வைத்தீஸ்வரி ஆகியோருக்கு மகனாக பிறந்தார் இவருக்கு சரோஜினி என்ற மனைவியும் கன்னிகாபரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி ஆகிய மகள்களும், சுப்ரமணியன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.[3] திரைப்படங்களில் நடித்த பின்னர் பணம், புகழுடன் வசதியாக வாழ்ந்தாலும், தனது கடந்த காலத்தில் ஏழ்மையோடு போராடியதை மறக்காத வடிவேலு தனது மகன் சுப்ரமணியனுக்கு, சிவகங்கை அருகே உள்ள திருப்புவனத்தில் ஒரு கூரை வீட்டில் வசிக்கும் ஏழ்மையான குடும்பத்தில் புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.

சின்னகவுண்டர்’ திரைப்படத்தினை தொடர்ந்து ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ என ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், குறுகிய காலத்திற்குள் அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை அரசர்களாக விளங்கிக்கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம்வந்தார். தொடக்கத்தில் இவர் நடித்த, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘வாட்ச்மேன் ‘பொங்கலோ பொங்கல்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, சுந்தர புருஷன், ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, போன்ற திரைப்படங்கள் இவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுத்தந்தது


திரைப்படங்களில் பெரும்பாலும் கதாநாயகர்கள்தான் பஞ்ச் டையலாக் பேசுவார்கள், ஆனால் வடிவேலுவின் நகைச்சுவையில் உதிர்ந்த அத்தனை வார்த்தைகளும் பஞ்ச டையலாக்கைத் தாண்டி வரவேற்பை பெற்றது எனலாம். மேலும், சொல்லாப்போனால் ஒவ்வொரு குழந்தைக்கும் இவர் பேசிய நகைச்சுவை வசனங்கள் அத்துப்படி. இதை விட ஒரு நடிகனுக்கு வேறு என்ன விருது பெருமை சேர்க்க முடியும். இவரது நகைச்சுவை வசனங்களான "ஆகா ஒரு குரூப்பாத்தான் அலையிராங்கய்யா", "வந்ததுட்டான்யா வந்ததுட்டான்யா" மற்றும் சந்திரமுகி திரைப்படத்தில் இடம்பெற்ற "மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு" போன்றவை மிகவும் பிரபலமானவை. இத்தகைய வசனங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடையை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இவ்வசனங்கள் அன்றாட வாழ்க்கையில் பலராலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது சிறப்பான நகைச்சுவை நடிப்பிற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதினை ஐந்து முறை காலம் மாறிப்போச்சு (1996), வெற்றிக் கொடி கட்டு (2000), தவசி (2001), இம்சை அரசன் 23ம் புலிகேசி (2006), காத்தவராயன் (2008) திரைப்படங்களுக்காகவும், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதை 2005-ம் ஆண்டில் வெளியான சந்திரமுகி திரைப்படத்திற்காகவும் வென்றுள்ளார். ‘மருதமலை’, ‘ஆதவன்’ போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருதினை’ வென்றுள்ளார்.


கோவை சரளா (பிறப்பு: ஏப்ரல் 7, 1962) முக்கியத் துணை வேடங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை, மற்றும் நகைச்சுவை நடிகை ஆவார். 25 ஆண்டு திரைப்பட வாழ்க்கையில், சரளா 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1] இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது[2] மற்றும் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான நந்தி விருது[3] ஆகியவற்றை முறையே பூவெல்லாம் உன் வாசம் (2001) மற்றும் ஒரி நீ பிரேம பங்கரம் கனு (2003) ஆகிய படங்களில் அவரது நடிப்புக்காக வென்றுள்ளார்.

கோவை சரளா திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர், தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளை வளர்த்து வருகிறார்.

’என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்’ – கரகாட்டக்காரன்
‘என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்’ – கரகாட்டக்காரன்
’சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’ – ஷாஜஹான்
‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ – ஷாஜஹான்

More Popular Videos : 1. https://www.youtube.com/watch?v=5zBIfRs7Ai8&t=4s
2. https://www.youtube.com/watch?v=KNI6EtFeaEQ&t=816s
3. https://www.youtube.com/watch?v=OFQ6EOhQI_w
4. https://www.youtube.com/watch?v=qkmdnzz-ppo&t=16s

Please Subscribe Our Channel : https://www.youtube.com/channel/UCNkvpGUcF-31LfY4i04H-8Q?view_as=subscriber
THANK YOU FOR OUR SUBSCRIBER & KEEP WATCHING OUR CHANNEL
@My Music
Sign in or sign up to post comments.
Be the first to comment